இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச சாப்பாடு - எங்கே தெரியுமா?
ஹோட்டல் ஒன்றில் பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச சாப்பாடு தருகின்றனர்.
Garbage Cafe
சத்தீஸ்கர், அம்பிகாபூர் மாவட்டத்தில் Garbage Cafe என்ற ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு அந்த நகரத்தை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கஃபேயில் ஒருவர் 1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால், காலை உணவை இலவசமாக சாப்பிடலாம். இந்த காலை உணவில் ஆலு சாப், இட்லி, சமோசா, பிரட் சாப் போன்றவைகள் இருக்கும். 1 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், மதிய உணவை இலவசமாக சாப்பிடலாம்.
உணவு இலவசம்
இந்த மதிய உணவில் 4 ரொட்டிகள், 2 வகையான காய்கறிகள், 1/2 கப் சாதம், தால், சாலட், தயிர், ஊறுகாய், மற்றும் அப்பளம் போன்றவை அடங்கும். பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் இல்லாவிட்டால், அவர்களுக்கு இந்த கஃபே குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகிறது.
ஒரு அளவு சாப்பாட்டின் விலை ரூ.40. தாலியின் விலை ரூ.70. தூய்மை பிரச்சாரத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்ட இப்படி உணவகம் இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.