தனியார் மயமாகும் ரயில்வே? உறுதி செய்த மத்திய அரசு!
ரயில்வே தனியார் மயமாவது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ரயில்வே
இந்தியாவில் ரயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதுகுறித்த செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் உறுதி
அவர் கூறுகையில், ”ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது,ரெயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது தவறான கருத்தாகும். ரயில்வே தனியார்மயம் ஆகாது. இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களான கேதீஷ்வரன் - சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil