பிரதமரான மோடி; இந்தியாவுக்கே பேராபத்து, அழிவுக்காலம் ஸ்டார்ட் - பொங்கிய பிரபலம்!
இயற்கை சீற்றம் குறித்து வழக்கறிஞர் கீதா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இயற்கை சீற்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், பிரபல வழக்கறிஞருமான கீதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "இயற்கையின் சீற்றம் நம் நாட்டை அழிக்க போகிறது, பேரழிவு வரப்போகிறது என்று பலமுறை நான் சொல்லியிருக்கேன்.
அப்போதெல்லாம் என்னை பலரும் நக்கல் செய்தார்கள். ஆனால், இன்னைக்கு அதுதான் நடந்துட்டு இருக்கு. கடந்த 2024 ஜனவரியில் முன்கூட்டியே நான் கணித்து சொன்னேன், மோடியை பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தால், இந்தியாவுக்கே பேராபத்து வரும் இயற்கையாய்..
கடந்த மே மாதம் தேர்தல் ரிசல்ட் வந்ததிலிருந்து பார்த்தால், சிக்கிம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, மணிப்பூர், கர்நாடகா, தெலுங்கானா, மும்பை, தெலுங்கானா, கேரளா வயநாடு என இப்படி ஒரே வருஷத்தில் இத்தனை பேரழிவுகள் இதுவரை இந்தியாவில் வந்ததில்லை.
வழக்கறிஞர் காட்டம்
என்னுடைய கடவுள் என்னிடம் சொல்வது, இந்த மக்கள் இன்னும் திருந்தவில்லை.. தப்பு செய்துட்டேதான் இருக்காங்க.. எவ்வளவு தப்பு செய்தாலும், அவ்வளவும் திருப்பி கிடைக்கும். இதோ நான் 5 வருடமாக சொல்லிட்டு இருக்கேன். கொரோனா வந்தப்புறம்கூட மக்கள் திருந்தல.
ஏதோ ஒரு சக்தி நம்மை பார்த்துட்டுதான் இருக்கு.. சேவை செய்யக்கூடிய நபர் யாராவது வந்தால், அன்றைக்கு இதிலெல்லாம் மாற்றங்கள் வரும். நம்முடைய அரசாங்கத்தில் நிர்வாகத்திறமை திட்டமிடலுடன் இருக்கணும். 35 மார்க், 45 மார்க் வாங்கி பாஸ் பண்ண இன்ஜினியர்களை வேலைக்கு வைத்திருந்தால், அவர்களிடம் என்ன பிளானிங் இருக்கும்?
ஒரு பாலம் கட்டினால், பாதாள சாக்கடை கட்டினால், 150 வருஷத்துக்கு அது வேலை செய்யணும். அந்த அளவுக்கு உறுதியான கட்டுமானம் இருக்கணும். அரசு அதிகாரிகளால்தான் இந்த நாடே குட்டிச்சுவராக போச்சு. 2வது இந்த அரசியல்வாதிகள்" எனத் தெரிவித்துள்ளார்.