பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி? காவலருக்கு வந்த மெசேஜ் -பரபரப்பு!
பிரதமர் மோடியைக் கொலை செய்யப்போவதாகக் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி
மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது .அதில், பிரதமர் மோடியைக் குறிவைத்துக் குண்டுவெடிப்பு நடத்தச் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர் .இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மறுப்புறம் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், செய்தி அனுப்பப்பட்ட எண் வைத்து ஆய்வு செய்யப்பட்டது . அது ராஜஸ்தானில் உள்ளா அஜ்மீரிலிருந்து வந்தது தெரியவந்தது . மேலும், சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க உடனடியாக காவல் குழு ஒன்று அமைத்துத் தேடி வருகின்றனர்.
கொலை மிரட்டல்
இதற்கிடையே , செய்தி அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது, மதுபோதையிலிருந்திருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குக் கடந்த சில நாட்களாகப் பலமுறை வதந்தி மிரட்டல் செய்திகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.