ரத்தன் டாடா மறைவு - இப்போது சாந்தனு நாயுடு என்ன செய்கிறார்?
சாந்தனு நாயுடு புதிய தொழில் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
சாந்தனு நாயுடு
நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று டாடா. கடந்த அக். 9ம் தேதி ரத்தன் டாடா திடீரென காலமானார். அவருக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பலரும் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தினர்.
இதற்கிடையில் ரத்தன் டாடாவின் நண்பரும் மேனேஜருமாக இருந்த சாந்தனு நாயுடு குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து தற்போது அவர் தனது வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
புதிய தொழில்
மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூடி அமைதியாகப் படிக்கும் ஒரு வாசிப்புச் சமூகமான புக்கீஸ் எனும் அமைப்பை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், புனே மற்றும் பெங்களூரு வரை கொண்டு சென்றுள்ளார். இந்த வார தொடக்கத்தில், அவர் ஜெய்ப்பூரில் புக்கீஸை தொடங்கி வைத்தார். டிசம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் நிகழ்வில் பதிவு செய்ய வாசகர்களையும் அழைத்துள்ளார்.
இதுதவிர டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற பிற இந்திய நகரங்களுக்கு புக்கீஸ் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.