டாப்பில் மாங்காய் ஊறுகாய் - அப்படி எதுக்கு இவ்வளவு பேர் இதை கூகுளில் தேடியிருப்பாங்க?
Mango
Google
India
By Sumathi
கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் மாங்காய் ஊறுகாய் இடம்பெற்றுள்ளது.
கூகுள் தேடல்
2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகம் தேடப்பட்ட செய்திகள், படங்கள், உணவு வகைகள் அடங்கிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மாங்காய் ஊறுகாய் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மாம்பழ சீசன் நிலவும்போது மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மாங்காய் ஊறுகாய் போடுவது வழக்கம்.
அதன்படி, மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி என்று அதிகம் பேர் தேடியுள்ளனர். இந்த பட்டியலில் கஞ்சி 8 ஆவது இடம் பிடித்துள்ளது. பார்ன் ஸ்டார் மார்டினி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகம் தேடப்பட்ட உணவுகள்
- பார்ன் ஸ்டார் மார்டினி
- மாங்காய் ஊறுகாய்
- தனியா பஞ்சரி
- உகாதி பச்சடி
- சர்னாம்ரிட்
- எமா தட்சி
- ஃபிளாட் வைட்
- கஞ்சி
- ஷங்கர்பலி
- சம்மந்தி