ஓபிஎஸ்க்கு தொடரும் சறுக்கல் - கூடவே இருந்து ஜம்ப் அடித்த ஆதரவாளர்கள்! யார்? யார்?

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 21, 2022 09:57 AM GMT
Report

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மூன்று மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதிமுக

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக அதிமுக கட்சிக்குள்ளே ஒரு கலவரமே வெடித்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ்க்கு தொடரும் சறுக்கல் - கூடவே இருந்து ஜம்ப் அடித்த ஆதரவாளர்கள்! யார்? யார்? | Ganesh Raja Sattur Ravichandran Jump From Ops

பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் எடப்பாடி தரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்.

இபிஎஸ் தரப்புக்கு தாவல்

தொடக்கத்திலிருந்தே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு தாவி விட்ட நிலையில், சார்பு அணிகளான எம்ஜிஆர் இளைஞரணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை,

ஓபிஎஸ்க்கு தொடரும் சறுக்கல் - கூடவே இருந்து ஜம்ப் அடித்த ஆதரவாளர்கள்! யார்? யார்? | Ganesh Raja Sattur Ravichandran Jump From Ops

இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் இபிஎஸ் தரப்புக்கு தாவி விட்டனர்.

 ரகசிய உத்தரவு

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயலாளர் விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஒன்று அல்லது இரண்டு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே ஓபீஸுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி

தனித் தீர்மானம் 

ஒற்றை தலைமையாக பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதம் அனுப்ப வேண்டும் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தை வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டுமெனவும், அதில் எடப்பாடி பழனிச்சாமிக்குப் ஆதரவாக கையெழுத்திட்டு மாவட்டச் செயலாளர்கள் மூலம் கடிதங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது

அதே நேரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தால் இந்தப் பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ .பன்னீர்செல்வம் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.    

பிறந்த சிசுவின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள்ளே வைத்த பகீர் சம்பவம்! பின்னணி என்ன?