பிறந்த சிசுவின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள்ளே வைத்த பகீர் சம்பவம்! பின்னணி என்ன?
பாகிஸ்தானில் பிறந்த குழந்தையின் தலையை துண்டித்து மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த சுகாதார துறை ஊழியர்களின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த இந்து பெண் ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு, அருகில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்களே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. உடனே குழந்தையின் தலையை வெட்டி அந்த பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே சுகாதார ஊழியர்கள் வைத்துள்ளனர்.
அனுபவமற்ற ஊழியர்கள்
இதனால் குழந்தையின் தலை கருச்சிதைவுக்குள் மாட்டி கொண்டதால், அந்த பெண் உயிருக்க ஆபத்தான நிலைக்கு சென்று விட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தாயின் வயிற்றை அறுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் எஞ்சிய உறுப்புகளையும், தலையையும் வெளியே அகற்றி பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.
அதிர்ச்சி சம்பவம்
இந்த கொடூரமான செயல் வெளியே தெரியவந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுகாதாரத்துறையின் ஊழியர்கள் செய்த இந்த செயல் குறித்து விசாரணை நடத்த, பாகிஸ்தான் சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சாக்ரோவில் பெண் மருத்துவர்கள் இல்லாமல் போனது எப்படி என்றும், ஊழியர்கள் எதற்காக இந்த செயலை செய்தார்கள் என்றும் விசாரிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது, சில ஊழியர்கள் அந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாகவும், சிலர் குழந்தை பிறந்ததையும் செல்போன் மூலம் படம் பிடித்து,
பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் அனுப்பி வைத்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
16 வயதிலேயே முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!