மார்வெல் தொடரில் சூப்பர் ஸ்டார் பாடல் : குஷியில் தமிழ் ரசிகர்கள்

Rajinikanth
By Irumporai Jun 10, 2022 04:35 AM GMT
Report

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ‘மிஸ் மார்வெல்’ எனும் அமெரிக்கத் தொடரில், லிங்கா படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

லிங்கா பாடல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் லிங்கா. இப்படம் வெளியான பொது வணிக ரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியதாக கூறப்பட்டது .

ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன ரேடியோக்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இசை கீதமாக ஒளித்தன.

மார்வெல் திரையில் சூப்பர் ஸ்டார் பாடல் 

இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளமிஸ் மார்வெல் எனும் அமெரிக்கத் தொடரில், லிங்கா படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. MCU எனப்படும் மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்சின் 17ஆவது தொலைக்காட்சித் தொடராக மிஸ் மார்வெல் தொடர் வெளியாகியுள்ளது.

மார்வெல் தொடரில் சூப்பர் ஸ்டார் பாடல் : குஷியில் தமிழ் ரசிகர்கள் | Arr Spb Song From Linga Movie Ms Marver Series

நேற்று முன் தினம் (ஜூன் 8) இந்தத் தொடரின் முதல் எபிசோட் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து பாகிஸ்தானி அமெரிக்க பள்ளியில் படிக்கும் 16 வயது கமலா கான், கேப்டன் மார்வெலின் தீவிர விசிறியான விளங்கிறார்.

சூப்பர் ஹீரோ ஃபேன் ஃபிக்‌ஷன் எழுதும் அவர் தன் நெருங்கிய தோழியுடன் இணைந்து அவெஞ்சர் கான் எனும் நிகழ்வில் கலந்துகொள்ளும் போது ஏற்படும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த தொடர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் லிங்கா படத்தின் ரஜினியின் அறிமுக பாடலான ஓ நண்பா நண்பா வா கலக்கலாம் வா’ எனும் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

மார்வெல் தொடரில் சூப்பர் ஸ்டார் பாடல் : குஷியில் தமிழ் ரசிகர்கள் | Arr Spb Song From Linga Movie Ms Marver Series

இந்த நிலையில், எஸ்.பி.பியின் கணீர் குரலில் அமைந்துள்ள இந்தப் பாடல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மிஸ் மார்வெல்’ தொடரில் தற்போது இடம்பெற்றுள்ளது.  இதனை பார்த்த நம் தமிழ் ரசிகர்கள் இணையத்தில் இந்த காட்சியினை வைரலாக்கி வருகின்றனர்.