கோலி இடத்தை நிரப்பப் போவதே கம்பீர் தான்.. டேல் ஸ்டெய்ன் சொன்ன காரணத்தை பாருங்க..
கோலி இடத்தை நிரப்பப் போவதே கம்பீர் தான் என டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
டேல் ஸ்டெய்ன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் பேசுகையில்,
"நான் கவுதம் கம்பீரின் தீவிர ரசிகன். அவரது ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஆடிய இந்திய வீரர்களிலேயே நம்மை எதிர்த்து ஆடக்கூடிய சிலரில் இவரும் ஒருவர். அதை நான் விரும்புகிறேன். இனி இந்திய அணிவீரர்கள் மத்தியில் அந்த ஆக்ரோஷத்தை கவுதம் கம்பீர் கொண்டு செல்ல இருக்கிறார்.
கம்பீர் ஆக்ரோஷம்
விராட் கோலி இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில், இனி கவுதம் கம்பீர் தனது ஆக்ரோஷ குணத்தால் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பார். மூத்த வீரரான விராட் கோலி போன்றோர் இனி அதிகம் போட்டிகளில் பங்குபெற மாட்டார்கள்.
நான் இதை உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலான கிரிக்கெட்டிலும் இதுபோன்ற ஆக்ரோஷமான நபர்கள்தான் நமக்கு தேவை எனத் தெரிவித்துள்ளார்.