இந்திய அணியில் நடராஜன்? இனி தேர்வு இப்படிதான் - வெளிப்படையாக சொன்ன கம்பீர்!
இந்திய அணித் தேர்வு குறித்து கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலத்தில் 5 ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கவுதம் கம்பீர் பேசிய பல்வேறு விஷயங்கள் ரசிகர்களால் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், இந்திய டி20 அணிக்கான தேர்வு ஐபிஎல் தொடரில் இருந்து நடக்க வேண்டும்.
இந்திய அணித் தேர்வு
அதேபோல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் தேர்வு ரஞ்சி டிராபி தொடரில் இருந்து நடக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராகவும், விமர்சகராகவும் செயல்பட்டு வந்தார். அப்போது நடராஜன் குறித்து அவர் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, கவுதம் கம்பீர் பதவிக் காலத்தில் இந்திய அணியின் தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.