ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ; முதல் அடி வாங்கிய கம்பீர் - என்ன நடந்தது?
கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ அதிர்ச்சி அளித்துள்ளது.
கவுதம் கம்பீர் கோரிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு உச்சபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
அதன்படி, துணை பயிற்சியாளர்களை கவுதம் கம்பீர் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சொன்ன துணை பயிற்சியாளர்களில் ஒருவரை மட்டுமே பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
பிசிசிஐ மறுப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான அபிஷேக் நாயரை மட்டும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஒப்புக் கொண்டு, பவுலிங் பயிற்சியாளராக வினய் குமாரை ஏற்க முடியாது என மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த முடிவுகளால் கவுதம் கம்பீருக்கு உச்சபட்ச அதிகாரம் இல்லை என தெரியவருவது குறிப்பிடத்தக்கது.