பிரதமராக பதவியேற்கும் தன்பாலின ஈர்ப்பாளர்;அதுவும் இளம் வயதில்.. யார் இந்த கேப்ரியல்?
இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றுள்ளார்.
கேப்ரியல் அட்டல்
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் கடந்த 2022ம் ஆண்டு பதவியேற்றார். அந்த சமயத்தில் அரசு கொண்டு வந்த குடியேற்றச் சட்டங்கள், ஓய்வூதிய கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் தோல்வி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மேக்ரான் அரசு இழந்தது. மேலும் 62 வயதான எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் .. போதை மருந்து பயன்படுத்தினாரா ?பரிசோதனை முடிவுகள் கூறுவது என்ன?
பிரான்ஸ் பிரதமர்
இந்நிலையில் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வி அமைச்சரான கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக தெரிவித்துக்கொண்டவர்.
அதிபர் இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய நண்பரான அவர், நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. மேலும், அறிவார்ந்த அமைச்சர்களில் ஒருவர் எனவும் பாராட்டப்பட்டவர்.
மேலும் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும், மிகக் குறைந்த வயதில் பிரதமரான சிறப்பையும் பெறுவார்.