ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்தான் : சுதா மூர்த்தி பெருமிதம்

Rishi Sunak
By Irumporai Apr 29, 2023 04:55 AM GMT
Report

ரிஷி சுனக்கினை பிரதமராக்கியது எனது மகள் தான் என்று சுதா மூர்த்தி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 சுதா மூர்த்தி

பிரபல தொழில் அதிபரும் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தனது இன்ஸ்டகிராம் சமூக வளைத்தளபக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் , அதில் கூறியுள்ளதாவது .

   ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள். என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள்.

ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்தான் : சுதா மூர்த்தி பெருமிதம் | My Daughter Made Rishi Pm Of England Sudha Murthy

இளம் வயது பிரதமர்

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தனது 42 வயதில் பிரதமரானார். இங்கிலாந்து நாட்டின்  மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக் தான் எனப்து குறிப்பிடத்தக்கது.