குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் .. போதை மருந்து பயன்படுத்தினாரா ?பரிசோதனை முடிவுகள் கூறுவது என்ன?

Finland Viral Photos Crime
By Irumporai Aug 23, 2022 04:08 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சொகுசு விடுதியில் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வழக்கில் சிக்கியுள்ள பின்லாந் பிரதமருக்கு நடத்தபட்ட போதை மருந்து சோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பிரதமர்

பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக 36 வயது பெண்ணான சன்னா மரின் பதவி வகித்து வருகிறார். உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்றவர் சன்னா மரின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன், நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது .

குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகளும் இணையவாசிகளும் கடும் விமர்சனத்தை வைத்தனர். அதுமட்டும் இன்றி சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தினரா பரிசோதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் .. போதை மருந்து பயன்படுத்தினாரா ?பரிசோதனை முடிவுகள்  கூறுவது என்ன? | Finnish Pm Drug Test To Clear Suspicions

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து பிரதமர் சன்னா மரின் தான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்தார்.  

வெளியான பரிசோதனை முடிவுகள்

மேலும் தனது வாழ்நாளில், என் இளமை பருவத்தில்யில் கூட, நான் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார். அதே சமயம் தனதுசர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தாமாக முன் வந்து போதை மருந்து சோதனைக்கு முன் வந்த நிலையில் அவரது சிறு நீர் பரிசோதிக்கப்பட்டது.

குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் .. போதை மருந்து பயன்படுத்தினாரா ?பரிசோதனை முடிவுகள்  கூறுவது என்ன? | Finnish Pm Drug Test To Clear Suspicions

அதில் அவர் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 ஆகஸ்ட் 2022 அன்று பிரதமர் சன்னா மரினிடம் இருந்து எடுக்கப்பட்ட மருந்துப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.