கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதியுதவி - அவசியம் இதை நோட் பண்ணுங்க!
கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகப்பேறு நிதியுதவி
தமிழக அரசு சார்பில் டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை,
வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், பிக்மி எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தொடர்ந்து, 4வது மாதத்திற்கு பின் 2வது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்கிடையில், சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் 2 முறை வழங்கப்படுகிறது.
புதிய மாற்றம்
பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவதுதவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.
தற்போது, இதற்குமுன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவதுமாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
மேலும், 3வது மற்றும் 6வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பபட உள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.