இந்திய கர்ப்பிணி மரணம் - சுகாதார அமைச்சர் ராஜினாமா!
போர்ச்சுகல் சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி உயிரிழந்ததையடுத்து சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
கர்ப்பிணி மரணம்
போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கர்ப்பிணிக்கு அங்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் லிஸ்பனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,
அங்கு படுக்கை வசதி இல்லாததால் பின் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சுகாதார அமைச்சர் ராஜினாமா
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலே போர்ச்சுகல் நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார். அவசர சிகிச்சை சேவைகள் மூடல், மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் தேசிய சுகாதார சேவையின் இயலாமை காரணமாக சிக்கல்களுக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்,
தொடர்பான கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, டெமிடோ ராஜினாமா வந்தது. இதுகுறித்து போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, ட்விட்டரில் டெமிடோ செய்த அனைத்து பணிகளுக்கும் “நன்றி”, குறிப்பாக கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் என்று பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுகல் பிரதமர்
சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத் தொடரவும் கோஸ்டா உறுதியளித்தார். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இந்தியப் பெண் 31 வார கர்ப்பமாக இருந்தார், மேலும் மூச்சுத் திணறல் புகார் காரணமாக நாட்டின் மிகப்பெரிய சுகாதார சேவைகளில் ஒன்றான சாண்டா மரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரான பிறகு, மருத்துவமனையின் பேறுகாலப் பிரிவு நிரம்பியதால், அவர் சாவோ பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு மாற்றியதாகவும், அப்போது வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை
இரண்டாவது மருத்துவமனையில், அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தை, குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்ணின் மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர் நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.