கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

Narendra Modi Pregnancy Government Of India
By Swetha Mar 19, 2024 05:44 AM GMT
Report

கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் திட்டம்

பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தவணையாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? | How To Apply For This Pregnant Women Scheme

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விண்ணப்பிப்பதன் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பு வரை 3 தவணைகளில் நிதி வழங்கப்படும்.

மேலும், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் இலவச மருந்துகள் மற்றும் கர்ப காலத்திற்கு முன், பின் மேற்கொள்ளும் பரிசோதனை ஆகிய வசதிகளும் உள்ளது.

பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த 'பிக் பாஸ்' பிரபலம் கைது!

பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த 'பிக் பாஸ்' பிரபலம் கைது!

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தில் பயன் பெற https://pmmvy.wcd.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று குடிமகன் உள்நுழைவு விருப்பத்தை க்ளிக் செய்யவும். பின்னர், ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஒரு படிவம் திறக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? | How To Apply For This Pregnant Women Scheme

அவற்றில் கேட்கப்படும் தகவல்களை அளித்துவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பின்னர் சமர்ப்பி என்ற பட்டனை அலுத்தினால் உங்களுக்கு ஒரு பதிவு எண் கிடைக்கும். பிறகு விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு நிதிஉதவி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? | How To Apply For This Pregnant Women Scheme

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள். அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

அதன் பிறகு உங்களுக்கு ரசீது வழங்கப்படும்.அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில், பணம் வராவிட்டால், ரசீது மூலம் விசாரிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை, குழந்தை பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பான் கார்டு, வாங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை பதிவு செய்ய தேவைப்படும்.

முக்கிய தகுதி

இந்த திட்டம் வாயிலாக பலன் பெற விண்ணப்பத்தாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.