இந்த ஒரு பழத்தை மட்டும் விமானத்தில் எடுத்துச்செல்ல தடை - எது தெரியுமா?
விமானத்தில் எடுத்துச்செல்ல முடியாத பழம் குறித்த தகவலை பார்க்கலாம்.
விமான பயணம்
விமான பயணத்திற்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்துக்கொள்வது முக்கியம். இதை யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள், ஆனால் சில உணவுகள் விமானத்தில் ஏறும் முன் தவிர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு விமானத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை குறித்து பார்ப்போம். கத்தரிக்கோல், கூர்மையான உலோகம், பொம்மை வடிவிலான ஆயுதங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உபகரணங்கள். பயன்பாட்டுக் கத்திகள் உள்ளிட்ட கூர்மையான பொருள்கள்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
பேஸ்பால் மட்டைகள், வில் மற்றும் அம்புகள், கிரிக்கெட் மட்டைகள், ஹாக்கி குச்சிகள், வளைகோல் பந்தாட்டக் குச்சிகள், பனி நடைக் கட்டைக் கம்பங்கள், ஈட்டி சுடுகலன்கள் போன்ற விளையாட்டுப் பொருட்கள். துப்பாக்கிகளின் பாகங்கள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட துப்பாக்கி வகைகள்.
தற்காப்புக் கலைகளுக்கான ஆயுதங்கள், அதிர்ச்சியூட்டும் சாதனங்கள். இந்த வரிசையில் ஒரு பழம் இடம்பெற்றுள்ளது என்பது தெரியுமா? தேங்காய்களை விமானத்தில் கொண்டு செல்ல முடியாது.
தேங்காய்களில் அதிக எண்ணெய் உள்ளடக்கம் இருப்பதால், எளிதில் தீ பற்றக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.