2 நிமிஷ மீட்டிங்தான்; 200 பேரை வேலையை விட்டு தூக்கிய நிறுவனம் - தவித்த ஊழியர்கள்!

United States of America
By Sumathi Jan 08, 2024 07:34 AM GMT
Report

நிறுவனம் ஒன்று 200 பேரை வேலையை விட்டு நீக்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

லாபம் இல்லை

ஃப்ரன்ட் டெஸ்க் (FrontDesk) என்ற நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சொத்து தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

frontdesk-layoff

இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 2017ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

6 மணி நேரம் கழிவறைக்கு சென்ற நபர் - வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்!

6 மணி நேரம் கழிவறைக்கு சென்ற நபர் - வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்!

தவித்த ஊழியர்கள்

இந்நிலையில், திடீரென கூகுள் மீட் மூலமாக சுமார் 200 பணியாளர்களை தொடர்பு கொண்ட இதன் நிர்வாக அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் 2 நிமிடத்தில் வேலையை விட்டு நீக்கினர். லாபத்தை ஏற்படுத்த தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2 நிமிஷ மீட்டிங்தான்; 200 பேரை வேலையை விட்டு தூக்கிய நிறுவனம் - தவித்த ஊழியர்கள்! | Frontdesk Layoff Its 200 Employees Google Meet

வேலை இழந்த பணியாளர்கள், தங்களது எதிர்காலம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனத்தின் பல கிளை அலுவலகங்களுக்கு வாடகை தொகை கொடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.