6 மணி நேரம் கழிவறைக்கு சென்ற நபர் - வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்!

China
By Sumathi Jun 05, 2023 04:36 AM GMT
Report

 6 மணிநேரம் அலுவலக கழிப்பறையில் நேரத்தை செலவிட்டதால் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணிநீக்கம்

சீனாவைச் சேர்ந்தவர் வாங்(35). 26 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

6 மணி நேரம் கழிவறைக்கு சென்ற நபர் - வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்! | Chinese Fired Employee 6 Hours Shift Time Toilet

அதன் காரணமாக அவர் அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலையைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு பின் அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு

அதன் பின் முழுமையாக குணமடைந்துள்ளார். இருப்பினும் பல நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். தொடர்ந்து பணிக்கு திரும்பியவர் அதே போல் கழிவறையில் நீண்ட நேரம் இருந்து வந்துள்ளார். நிறுவனத்தின் பணி நேரம் 8 மணி நேரமாக இருக்கின்ற நிலையில் 6 மணி நேரம் கழிவறையிலேயே செலவிட்டுள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத அவர் வேலை செய்யும் நிறுவனம் வேலையை விட்டுத் தூக்கி உள்ளது. இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், பணியில் இருந்து வாங் நீக்கப்பட்டது சரிதான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.