18,000 பேரை வேலையை விட்டு தூக்கப்போகும் அமேசான் நிறுவனம் - ஷாக்கில் பணியாளர்கள்...!

Amazon
By Nandhini Jan 05, 2023 08:59 AM GMT
Report

அடுத்த சில வாரங்களில் 18,000க்கு மேற்பட்ட பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்யப்போவதாக Amazon நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வளவு பணியாளர்களை நீக்கும் நடவடிக்கை மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கை விட அதிகமாகும்.

Amazon நிறுவனம்

அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக அமேசான் உள்ளது.

Amazon நிறுவனம் சமீபத்தில் சாதனை வருவாய் மற்றும் லாபம் ஈட்டியது. அமேசான் மதிப்பு 868 பில்லியன் டாலர்கள். Amazon நிறுவனர் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு $107 பில்லியனாகும்.

amazon-18000-termination-of-employment

18,000 பேர் பணி நீக்கம்

1997ம் ஆண்டு அமேசானில் இணைந்த ஜாஸ்ஸி, தொழில்நுட்ப நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் AWS கிளவுட் சேவைப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

ஜூலை 2021ம் ஆண்டு நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி பணியை ஜாஸ்ஸி ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து ஜாஸ்ஸி பேசுகையில், உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Amazon சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

2022ம் ஆண்டு முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை 2023 வரை தொடரும். ஜனவரி 18ம் தேதி தொடங்கும் பணி நீக்கங்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள Amazon திட்டமிட்டுள்ளது என்றார்.