சொந்த ஊர் செல்லும் மக்களே.. தமிழக அரசு சொன்ன முக்கிய அறிவிப்பு!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Vidhya Senthil Oct 27, 2024 05:13 AM GMT
Report

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

  போக்குவரத்துக்கழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து L1,176 பஸ்களும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பஸ்களுமாக ஓட்டு மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

tn transport

அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம்,

டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு- ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை!

டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு- ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை!

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியார், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம்,

முழுவிவரம் 

காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.சென்னை கோயம்பேடு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து வேலார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்,

tamilnadu govt

காஞ்சீபுரம், செய்யாறு, ஒசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், ம.யிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படுகிறது.