டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு- ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை!
டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பேருந்து நடத்துநர் கீழே தள்ளிவிட்டு உயிரிழந்த செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை சைதாப்பேட்டை, சின்ன மவுண்ட், வாத்தியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (வயது 52). அரசு பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை மகாகவி பாரதி நகரில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பணியிலிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அண்ணா ஆர்ச் அருகே வந்தபோது குடிபோதையில் பயணித்த கோவிந்தன் என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் ஜெகன் குமார் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். இதனால் மதுபோதையிலிருந்த கோவிந்தனுக்கும் நடத்துநர் ஜெகன் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த நடத்துநர் ஜெகன் குமார் டிக்கெட் கொடுக்கும் எந்திரத்தால் கோவிந்தன் தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் காயமடைந்து ரத்தம் வடிந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தன் ஆத்திரத்தில் நடத்துநர் ஜெகன் குமாரைப் பேருந்திலிருந்து கீழே தள்ளியுள்ளார்.இதில், பலத்த காயமடைந்த ஜெகனை ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மூக்கில் ரத்தம் வழிந்தபடி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து குடிபோதையிலிருந்த கோவிந்தனைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.