இனி டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்..இதுவே முதல்முறை - எந்த ரூட்டில் இயங்கும் தெரியுமா?
தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில்..
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. இதில் 2ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது.
இது தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது, "வரும் ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட 3 மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
டிரைவர் இல்லா..
அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல்,
பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் (45.4 கி. மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பனிமனை (26.1 கி. மீ) ,
மாதவரம் - சோழிங்கநல்லூர் (44.6 கி. மீ) வரையிலும் என சுமார் 116.1 கி. மீ தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டம் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.