ரூ.25 ஆயிரம் போதும்.. இந்த நாடுகளுக்கெல்லாம் ட்ரிப் போகலாம் - எப்படி?
ரூ.25 ஆயிரம் பட்ஜெட்டில் செல்ல ஏதுவான நாடுகள் குறித்து பார்க்கலாம்.
குறைந்த பட்ஜெட்
கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்களா? வெளிநாடுகளை பட்ஜெட் கருதி பட்டியலில் இருந்து தவிர்ப்பது வழக்கம். ஆனால், ரூ.25 ஆயிரத்துக்குள் சில நாடுகளுக்கு செல்லலாம்.
நேபாளம் இமய மலைகள், பாரம்பரிய கலாச்சாரம், விருந்தோம்பல் என பல்வேறு அம்சங்களுக்கு சிறப்பு வாய்ந்த இடம். பட்ஜெட் சுற்றுலா செல்லவும் இது ஒரு சிறந்த நாடு.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் நிறைந்திருக்கும் இலங்கை. பட்ஜெட் அதிகம் தேவைப்படாத நாடுகளில் ஒன்று தான்.
தாய்லாந்து பலரது பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும். இந்த நாடு கொண்டாட்டத்திற்கு பெயர்போனது. முறையான திட்டமிடல் இருந்தால் குறைந்த பட்ஜெட்டில் இங்கு சுற்றுலா செல்லலாம்.
நவீன சூழல், பழமையான கலாச்சாரம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் வியட்நாம். இதுவும் பட்ஜெட்டை பாதிக்காத பட்டியலில் உள்ள நாடுகளில் ஒன்று.