இந்த நாடுகளுக்கு செல்ல வெறும் 5 மணி நேரம் தான் - அதுவும் இந்தியாவில் இருந்து...
இந்தியாவில் இருந்து சில மணி நேரங்களில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து பார்ப்போம்..
வெறும் 5 மணி நேரம்..
இந்தியாவிலிருந்து 2.5 மணி நேரம் பயணிக்கக்கூடிய தீவு நாடு இலங்கை. இங்கு பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய கடற்கரைகளை காணலாம்.
துபாய் செல்ல 3 மணி நேரமாகிறது. ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற இந்த நகரம் ஷாப்பிங் செய்ய சிறந்த இடம்.
நேபாளம் செல்ல 2.5 மணி நேரமாகிறது. பூட்டான் செல்ல 2 மணி நேரம்தான். ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இந்த இரு நாடுகளும் சரியான தேர்வு.
இந்தியர்களின் விருப்பமான நாடான தாய்லாந்து செல்ல 4.5 மணி நேரமாகிறது. கடற்கரைகள், சுறுசுறுப்பான தெருக்கள் என ஏராளமான கண்கவர் இடங்கள் நிறைந்துள்ளது.
மலேசியா செல்ல 5 மணி நேரமாகிறது. கலாச்சார செழுமையைக் கண்டறிய இங்கு பல விஷயங்கள் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங், பலவகையான உணவு வகைகளை ருசித்து, வானளாவிய கட்டிடங்களை ரசிக்க சிங்கப்பூர். இங்கு செல்ல 5 மணி நேரம்.