முட்டையா? கோழியா? எது முதலில் வந்தது - ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்!

Attempted Murder Indonesia Death
By Sumathi Aug 01, 2024 08:42 AM GMT
Report

வாக்குவாதத்தில் இளைஞர் நண்பனையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டையா? கோழியா?

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் கதிர் மார்க்கஸ். இவர் தொழிலாளி ஒருவருடன் நண்பராக இருந்துள்ளார்.

முட்டையா? கோழியா? எது முதலில் வந்தது - ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்! | Friend Argument Murder Over Chicken Eggs

இந்நிலையில், கதிர் மார்க்கஸை, அவரது நண்பர் மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். தொடர்ந்து, இருவரும் தெற்கு சுலவேசியின் கரையோர பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, அவரது நண்பர் “கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என்று மார்க்கஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் கோழி வந்துச்சா? முட்டையா? உலகையே குழப்பிய கேள்வி - தீர்வு கண்ட விஞ்ஞானிகள்!

முதலில் கோழி வந்துச்சா? முட்டையா? உலகையே குழப்பிய கேள்வி - தீர்வு கண்ட விஞ்ஞானிகள்!

இளைஞர் உயிரிழப்பு

இது குறித்த விவாதம் சூடுபிடித்து, வாக்குவாதமாக மாற ஆத்திரமடைந்த நபர் மார்க்கஸை கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மார்க்கஸ் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

முட்டையா? கோழியா? எது முதலில் வந்தது - ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்! | Friend Argument Murder Over Chicken Eggs

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மார்க்கஸின் நண்பரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.