முதலில் கோழி வந்துச்சா? முட்டையா? உலகையே குழப்பிய கேள்வி - தீர்வு கண்ட விஞ்ஞானிகள்!
பல ஆண்டுகளாக மக்களிடையே ஏற்பட்டு வரும் குழப்பனா கேள்விக்கு தீர்வு கிடைத்துள்ளது.
முட்டையா? கோழியா?
முதலில் கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அனைவரும் குழம்பியது அறிந்த விஷயம் தான். இதற்கான விடை காண முயன்று பல தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு விடை கிடைத்திருப்பதாக சொல்கின்றனர். இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதுக்கு முடிவே இல்லையா?
பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் சயின்சஸ் பேராசிரியர் மைக்கில் பெண்டன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது. குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில்,
முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது. முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழைகளாக மாறின.
அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என்கின்றனர்.
முன்னதாக உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் ஆய்வில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. அப்போ கோழி எப்படி வந்தது என்றுதானே தற்போது தோன்றுகிறது. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போம்..!