பயங்கரவாதத்தை ஆதரித்தாரா ?நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் உத்தரவு!

France World
By Vidhya Senthil Oct 09, 2024 10:23 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

  அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

 பிரான்ஸ்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமாபின்லேடன்னை , கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது.

Omar bin Laden

இதனையடுத்து ஒசாமா பின்லேடனின் இளைய மகன் ஒமர் பின்லேடன் 43, சவூதியில் பிறந்த ஒமர் பின்லேடன், ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார்.

பின் பிரிட்டனில் தஞ்சமடைய விரும்பி போது அந்நாட்டு அரசு அவரை ஏற்க மறுத்தது.இறுதியில் 2016 இல் வடக்கு பிரான்சில் நார்மண்டியில் குடியேறினார் அங்கு ஓவியர், எழுத்தாளர், சமூக சேவகர் , தொழிலதிபர் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்.

இஸ்ரேல் போர் : ட்ரெண்டாகும் ஒசாமா பின்லேடனின் கடிதம் - அமெரிக்காவில் பரபரப்பு!

இஸ்ரேல் போர் : ட்ரெண்டாகும் ஒசாமா பின்லேடனின் கடிதம் - அமெரிக்காவில் பரபரப்பு!

இந்நிலையில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரீடெய்லியூ ஒமர் பின்லேடன் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஒமர் பின்லேடன்

இது குறித்து புருனே ரீடெய்லியூ, தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது : ஒமர் பின்லேடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மறை முகமாகப் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிய வருகிறது.

bin Laden son

ஏற்கனவே ஜிகாதியின் மகனாக இருப்பதால், நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். தேசியப் பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

இதனை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே ஒமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.