ஆள் வைத்து மனைவிக்கு பாலியல் வன்கொடுமை - கணவர் செய்த கொடூரம்
மனைவியை வன்கொடுமை செய்ய கணவரே இணையத்தில் ஆட்களை அமர்த்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதில் தந்தையே மகளை பாலியலுக்கு தொல்லை கொடுப்பது போன்ற கொடூரங்களும் அரங்கேறியுள்ளது.
இதே போல் தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய கணவரே இணையத்தில் ஆட்களை தேர்வு செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனைவிக்கு போதை பொருள்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 71 வயதான டொமினிக் பி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். தற்போது 72 வயதான இவரின் மனைவி கிசெலுக்கு அளவுக்கு அதிகமாக போதைபொருட்களை அளித்து, பாலியல் வன்கொடுமை செய்ய இணையத்தில் ஆட்களை அமர்த்தி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 72 ஆண்கள் எடுப்பட்டுள்ளதாகவும் கடந்த 10 வருடங்களாக 92 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுப்பட்டவர்கள் 26 வயது முதல் 72 வயது வரை உள்ளவர்கள்.
2020 ஆம் ஆண்டு வணிக வளாகத்தில் 3 பெண்களை ரகசியமாக படம் பிடித்த குற்றத்தில் டொமினிக் பி கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது லேப்டாப்பை ஆய்வு செய்த போது அவரது மனைவி போதையில் சுயநினைவு இன்றி இருக்கும் 100 க்கு மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
ஞாபக மறதி
மேலும் அவர் இணையத்தில் தெரியாத நபர்களுடன் தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டிற்கு அழைத்த உரையாடல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வன்கொடுமை செய்தவர்களில் 50 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்த கிசெல் உடன் அவரது மகள் மற்றும் 2 மகன்களும் வந்துள்ளனர்.
அதீத போதையால் என்ன நடந்தது என்றே கடந்த 10 ஆண்டுகளாக அவரால் உணர முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு, ஞாபக மறதியையும் எதிர்கொள்கிறார். என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.