70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - 29 வயது இளைஞர் கைது
70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 வயது மூதாட்டி
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வீட்டில் 70 வயது மூதாட்டி தனியாக தங்கியிருந்ததை அறிந்த இளைஞர் அங்கு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டியிடம் இருந்து சுமார் 7 சவரன் தங்கம் மற்றும் செல்போனை திருடிவிட்டு, மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின் வெளிப்பக்கமாக கதவை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.
கைது
இதனால் மூதாட்டியால் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதன் பின் இன்று காலை அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு காவல் துறையிடம் தகவல் அளித்துள்ளனர்.
திருடிய நகைகளை விற்க முயன்ற போது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் இவர் கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ்(29) என்பதும், இவர் மேல் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது என தெரியவந்துள்ளது.