6 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் கொடூர செயல்
6 மாத குழந்தை வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா
ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ராமபத்ரபுரத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழந்துள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணிக்கு, தனது 6 மாத குழந்தை வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் போது குழந்தையின் தாய் தனது10 வயது மகளுடன் வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அவர்களின் தூரத்து உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்ட குழந்தையின் மூத்த சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அந்நேரம் உறவினர் குழந்தையை கையில் வைத்திருப்பதையும், குழந்தை மேல் ரத்தகறை இருப்பதையும் பார்த்துள்ள அந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்ட உடனே குழந்தையின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர்.
கைது
உடனே அந்த உறவினர் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு தப்பியோடி விட்டார். குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ரத்தம் இருப்பதை பார்த்த தாய் உடனடியாக குழந்தையை படங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த உறவினரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய பொப்பிலி துணை காவல் கண்கணிப்பாளர் ஸ்ரீனிவாச ராவ், குற்றவாளியாக 40 வயதான போயினா வெரிக்கய்யா டோரா, மதுபோதையில் இந்த குற்றத்தை செய்துள்ளாதாகவும், ரத்தக்கறை படிந்த தொட்டில் மற்றும் குற்றவாளியின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
மேலும் இந்த சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கும்மடி சந்தியா ராணி, விஜயநகரம் மாவட்டத்தில் 6 மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அவர் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனையே தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் வாதாட முன்வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு பேரழிவு திட்டம்! நிந்தாவூரில் சாரா பதுங்கியிருந்ததாக தகவல் IBC Tamil
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil