வயிற்று வலியா? மூட நம்பிக்கையில் வயிற்றில் கற்பூரம் ஏற்றி கோடரியால் வெட்டிய பூசாரி

Karnataka
By Karthikraja Jul 14, 2024 07:24 AM GMT
Report

வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றை கோடரியால் வெட்டி பூசாரி கட்டு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் காலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிபவர் ஜக்கப்பா கட்டா(60). இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு உள்ளது. இங்கு உடலில் ஏதேனும் பாகத்தில் வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சூடம் ஏற்றி கோடரியால் வெட்டி பின்னர் மஞ்சள் தடவி கட்டுப்பாட்டால் சரியாகிவிடும் என்ற நமபிக்கை உள்ளது. 

cutting devotee stomach by axe karnataka

சம்பவத்தன்று, அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தீராத வயிற்று வலியை குணப்படுத்த கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபரை படுக்க வைத்து உடலில் எங்கு வலி அந்த இடத்தில் கற்பூரம் ஏற்றியதாக கூறப்படுகிறது.  

குழந்தையின் எதிர்காலத்துக்காக கிட்னியை விற்ற தந்தை - இறுதியில் நேர்ந்த சோகம்

குழந்தையின் எதிர்காலத்துக்காக கிட்னியை விற்ற தந்தை - இறுதியில் நேர்ந்த சோகம்

பூசாரி கைது

தரையில் படுத்திருக்கும் அந்த வாலிபரின் கைகளையும் கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த வாலிபரின் வயிற்றில் கோடாரியால் ஓங்கி இரண்டு முறை பூசாரி வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டும்போதே வயிறு கிழிந்து கோடாரி சற்று உள்ளே செல்கிறது ரத்தமும் வருகிறது. வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். பூசாரி கோடாரியை எடுத்த உடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. 

bagalkot police

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் பேரில் போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்துள்ளனர். மேலும் இது போன்ற மூடநமபிக்கை செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.