பணியில் இருந்த பெண் காவலரை தட்டி தூக்கிய கொடூரம் - பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி!
மதுபோதையில் பெண் காவலரின் மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெண் காவலர் லோகேஸ்வரி(23). இவர் கோயம்பேட்டில் உள்ள போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் பெண் காவலர் லோகேஸ்வரி ஈடுபட்டிருந்தார். அப்போது டீ அருந்துவதற்காகச் சென்ற காவலர் லோகேஸ்வரி சாலை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த காவல்துறை பூத் மற்றும் பெண் காவலர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காவல் லோகேஸ்வரி வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழே விழுந்தார்.
அதிர்ச்சி சம்பவம்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவலர் லோகேஸ்வரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து தகவல் அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை,
காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (29) என்பதும்,அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையிலிருந்ததும் தெரிய வந்தது. பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .