அயன் பாக்ஸில் பாய்ந்த மின்சாரம் -பள்ளி போகும் முன் சடலமாக திரும்பிய மாணவன்!
திருவள்ளூர் அருகே அயன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 9 ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் நெமிலி அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிபாபு. இவருக்கு 14 வயதில் தீபக் குமார் என்ற மகன் உள்ளார். இவர் விடையூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தீபக் குமார் தனது பள்ளி சீருடையை அயன் செய்வதற்காக வீட்டில் அயன்பாக்ஸ் பயன்படுத்தினார். அப்போது திடீரென்று அயன் பாக்ஸில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தீபக் குமாரை மீட்டு விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி தீபக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம்
மேலும் இந்த சம்பவம் குறித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் விடையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் அயன் பாக்ஸ் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.