மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!
பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஜி பேராசிரியர் கைது
கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தில் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் மீது ஆன்லைனில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
மேலும், புகார் அளித்த பெண்ணும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீஜித்தும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.
அதன் அடிப்படையில், போலீஸார் ஸ்ரீஜித்தை கைது செய்துள்ளனர். இவர் தற்போது தனியாக நடன பள்ளி அமைத்து வரும் நிலையில் இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.