கலாஷேத்ரா விவகாரம் : மாணவிகள் புகார் அளிக்க தனி இணையதளம்

Crime
By Irumporai Apr 22, 2023 05:27 AM GMT
Report

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

   கலாஷேத்ரா விவகாரம்

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். இதனையடுத்து, ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

[  

தனி இணையத்தளம்

இந்த நிலையில், பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க விரும்பும் மாணவர்கள், http://www.reachoutsupport.co.in/ என்ற இணையதள முகவரியில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.