கலாஷேத்ரா மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் விசாரணை குழு அமைப்பு

Tamil nadu Sexual harassment
By Thahir Apr 04, 2023 04:57 AM GMT
Report

கலாஷேத்ரா கல்லுாரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழு அமைப்பு 

சென்னை கலாஷேத்ரா கல்லுாரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரின் பெயரில் ஹரி பத்மன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

kalakshetra-girls-sexually-harassed

விரிவான விசாரணை 

முன்னாள் நீதிபதி கண்ணன், டாக்டர் ஷோபா வர்தாமான் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் உள்ளனர். இவர்கள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரல் 5ஆம் தேதி தேதி முதல் கலாஷேத்ரா கல்லுாரியில் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது. மாணவிகள் மத்தியில் புகார் அளிக்கப்பட்ட ஹரி பத்மன் உட்பட 4 ஆசிரியர்கம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே நாங்கள் தேர்வு எழுதுவோம் என கூறியுள்ளதாக தெரிகிறது.