மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள்

Gujarat Flight Death
By Sumathi Jun 12, 2025 12:33 PM GMT
Report

விமானம் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து

குஜராத், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

vijay roobani

இதில் 242 பேர் பயணம் செய்தனர். இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் பயங்கரமாக மோதியதில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

🔴LIVE: 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் - கதி என்ன?

🔴LIVE: 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் - கதி என்ன?

முன்னாள் முதல்வர் பலி

3 கட்டிடங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

flight crash

இதற்கிடையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பிஸ்னஸ் கிளாஸ்-இல் பயணம் செய்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.