🔴LIVE: 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் - கதி என்ன?

Gujarat Accident Flight Death
By Sumathi Jun 12, 2025 09:19 AM GMT
Report

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விமான விபத்து

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத், அகமதாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.

🔴LIVE: 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் - கதி என்ன? | Ahmedabad Plane Crash Updates

புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், கீழே விழுந்துள்ளது. இது குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேரடியாகச் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இனி ரயிலில் கடைசி நேர சிக்கலே இருக்காது - பயணிகள் பட்டியலில் புதிய நடைமுறை

இனி ரயிலில் கடைசி நேர சிக்கலே இருக்காது - பயணிகள் பட்டியலில் புதிய நடைமுறை

254 பேர் நிலை?

இந்த விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உட்பட 242 பயணிகள் இருந்துள்ளனர். அந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

🔴LIVE: 242 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் - கதி என்ன? | Ahmedabad Plane Crash Updates

மதியம் 1.38 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படை அதிகாரிகள் தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  

  • விமானப் பயண பட்டியலில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பெயர் 12ஆவதாக உள்ளது. 2016 முதல் 2021 வரை முதல்வராக பதவியில் இருந்தார்.
  • தற்போது வரை 133 உடல்கள் மீட்பு