நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில்; சிக்கிய வெளிநாட்டு பெண்கள் - மாதம் ரூ.50 லட்சம்!

Coimbatore Crime
By Sumathi Sep 08, 2024 02:30 PM GMT
Report

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழில்

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஸ்டார் ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில்; சிக்கிய வெளிநாட்டு பெண்கள் - மாதம் ரூ.50 லட்சம்! | Foreign Womens In Prostitution Coimbatore

அதன் அடிப்படையில், காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். அதன்படி, சிக்கந்தர் பாதுஷா (41) மற்றும் ஏஜென்ட் ஸ்டீபன் ராஜ் (30) ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், சிக்கந்தர் பாலியல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனை நிர்வகிக்க 8 மேனேஜர்களை நியமித்துள்ளார். பாலியல் தொழிலுக்காக ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - வெளிநாட்டு விஐபிகளுக்கு தொடர்பா?

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - வெளிநாட்டு விஐபிகளுக்கு தொடர்பா?

இருவர் கைது

இதில் இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 117 ஏஜென்ட்கள் உள்ளனர். தொடர்ந்து, பாலியல் தொழிலில் கிடைத்த லாபத்தில், பெங்களூரில் ஒரு பிரியாணி கடையும் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் மாதம் ரூ.50 லட்சம் சம்பாதித்துள்ளனர்.

சிக்கந்தர் பாஷா - ஸ்டீபன்

இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 பெண்கள் போலீஸால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கும்பலிடம் இருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.