சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - வெளிநாட்டு விஐபிகளுக்கு தொடர்பா?

Chennai Sexual harassment Crime
By Sumathi May 29, 2024 12:42 PM GMT
Report

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

பாலியல் தொழில் விவகாரம்

சென்னையில் பள்ளி சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - வெளிநாட்டு விஐபிகளுக்கு தொடர்பா? | Chennai Girls In Sex Work Connection With Vips

சில நாட்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் சிறுமியை மீட்டனர். கைதான ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில்,

17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் - பாலியல் தொழிலில் தள்ளிய பெண்!

17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் - பாலியல் தொழிலில் தள்ளிய பெண்!

தீவிரமாகும் விசாரணை

சென்னையில் சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளளை பாலியல் தொழிலில் தள்ளியதாக தி.நகரைச் சேர்ந்த சுமதி (40) அவருடைய சகோதரி நதியா (37) மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என மொத்தம் 8 பேரை போலீஸார் கைது செய்து போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - வெளிநாட்டு விஐபிகளுக்கு தொடர்பா? | Chennai Girls In Sex Work Connection With Vips

 தொடர் விசாரணையில், பள்ளி மாணவிகளை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளிய பின், அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது தெரியவந்தது. ஒவ்வொரு சிறுமிக்கும் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை கமிஷனாக பெற்று, அவர்களை வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுமிகளை வெளிநாட்டு விஐபிக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மூலமும் பாலியல் தொல்லை அளித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.