மனைவியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு தள்ளிய கணவன் - தற்கொலைக்கு முயன்ற புதுப்பெண்!
மனைவியை வீடியோ எடுத்து, கணவன் பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மிரட்டல்
சேலம், முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கடந்த 4 மாதத்திற்கு முன்பு உடையாபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில்,
”சேலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வனுடன் எனக்கு 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உடையாபட்டி அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தோம். நாங்கள் தனிமையில் இருந்தபோது, எனது நிர்வாண படங்களை கணவர் செல்போனில் எடுத்துள்ளார்.
மனைவி தற்கொலை முயற்சி
இதை அறிந்த நான், அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அவருடன் நெருங்கிப் பழகும் பல பெண்களின் நிர்வாண படங்களையும் அதில் வைத்திருந்தார். அதனை தட்டிக்கேட்ட என்னை அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும் எனது படத்தையும் அவரது நண்பர்கள் பலருக்கு அனுப்பி வீட்டிற்கு அழைத்து வந்து பகலிலேயே அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள சொல்லி அடித்து கொடுமைப்படுத்தினார்.
அதனையும் படமாக எடுத்து வைத்துள்ளார். இதனை பெற்றோரிடம் சொன்னால் அவர்களையும் என்னையும் கொன்று விடுவேன் என மிரட்டியதால் சொல்லாமல் இருந்தேன். ஆடி பண்டிகைக்கு வந்தபோது, நடந்ததை பெற்றோர் தெரிந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்த கணவன் தமிழ்ச்செல்வனை தாக்கினர்.
இதனால் தெருவில் உள்ளவர்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டதால் அவமானம் அடைந்த நான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்” என இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணின் கணவன் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.