வீட்டில் பணக்கஷ்டமா? அப்போ உடனே செருப்பை இந்த திசையில் மாற்றி வையுங்கள்!
வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் பணக்கஷ்டமா?
பொதுவாக இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வீடு கட்டுமானம் தொடங்கி சுவரில் அடிக்கப்படும் வண்ணங்கள் வரை பார்க்கப்படுகிறது. அதே போல தற்போது வீட்டில் காலணி வைப்பது முதல் ஆடை பராமரிப்பு வரை வாஸ்து பார்ப்பது அவசியம் ஆகிவிட்டது.
அதன்படி நாம் அணியும் செருப்பு,ஷூ போன்றவற்றை தலைகீழாக வைப்பது அபசகுனம் என்று வீடுகளில் அடிக்கடி பெரியவர்கள் சொல்லுவது உண்டு. அப்படி செய்தால் குடும்பங்களில் பிரச்சனை ஏற்படும் என்பது ஐதீகம். வாஸ்து சாஸ்திரத்தில் ஷூ மற்றும் செருப்புகளை வீட்டில் வைக்க சில விதிகள் கூறப்பட்டுள்ளது.
செருப்பு வைக்க தவறான திசை
காலணிகளை வடகிழக்கு திசையில் மற்றும் தப்பி தவறி கூட வைக்க கூடாது. ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.வடக்கு அல்லது கிழக்கு திசையில் கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது.
இதனால் வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்தும்.அதுமட்டுமின்றி, வீட்டில் வறுமை அதிகரிக்கும், பெரியவர்களின் உடல்நிலை மோசமாகும்.
செருப்பு வைக்க சரியான திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும்.
வீட்டின் முக்கிய நுழைவு வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
செருப்பு தலைகீழாக இருக்க கூடாது
காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. வாஸ்துப்படி, வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது.
அதனால் தான் ஷூ, செருப்புகளை தலைகீழாக வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.