அர்ஜெண்டினாவை வீழ்த்தியது கொலம்பியா - உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அசத்தல்!

Football World Sports
By Vidhya Senthil Sep 12, 2024 08:21 AM GMT
Report

2026-ம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்கத் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது.

 உலகக் கோப்பை 

அந்த வகையில் கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதின.

football

இதில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி களமிறங்கவில்லை .

இதனையடுத்து கொலம்பியா அணி தரப்பில் 25-வது நிமிடத்தில் யெர்சன் மாஸ்கோரா கோல் அடித்து அசத்தினார்.அதன்பிறகு 48-வதுநிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நிக்கோ கோன்சலஸ் பதிலடி கொடுத்தார் .

இந்திய கால்பந்து அணி; கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய கால்பந்து அணி; கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

இவர் அடித்த கோல் காரணமாக ஆட்டம் 1-1 எனச் சமநிலையை எட்டியது. மேலும் 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க அதுவே அந்த அணியின் வெற்றி அமைந்தது.

 அர்ஜெண்டினா

அர்ஜெண்டினா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில் - பராகுவே அணிகள் மோதின.

argentina

இதில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியைத் தோற்கடித்தது. பராகுவே அணி தரப்பில் 20-வது நிமிடத்தில் டிகோ கோமஸ் கோலடித்தார். முன்னதாக பிரேசில் மற்றும் பராகுவே அணிகள் இதுவரை 83 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

பிரேசிலுக்கு மிகவும் சாதகமான கண்ணோட்டத்துடன். செலிசாவோவுக்கு 50 வெற்றிகள், 22 டிராக்கள் மற்றும் 11 தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.