பாதி சொத்தை ஜீவனாம்சம் கேட்ட மனைவி - அதிரடி ட்விஸ்ட் கொடுத்த கால்பந்து வீரர்!
விவாகரத்து கோரி ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு கால்பந்து வீரர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விவாகரத்து
மொராகோவை சேர்ந்த கால்பந்து வீரர் அச்ராஃப் ஹக்கிமி(24). 2020ஆம் ஆண்டு ஹிபா என்ற பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஜோடி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனைவி ஹிபா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். தமக்கு ஜீவனாம்சமாக கால்பந்து வீரர் ஹக்கிமியின் பாதி சொத்து, பணம் , நகை என வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
அதிர்ச்சி
இந்நிலையில், ஹக்கிமி வாங்கிய சொத்து, வீடு, பணம் , நகை, கார் என அனைத்தும், தமது பெயரில் இல்லாமல் தனது தாயின் பெயரில் பதிந்து வைத்துள்ளார். மேலும், கால்பந்து விளையாடி, அதிலிருந்து வரும் பணமும் தாயின் வங்கி கணக்கில் தான் வைத்துள்ளாராம். இதனால் அவரிடம் சொத்து, கையிருப்பு பணம் கூட இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கேட்ட மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து ஹக்கிமி, னக்கு எல்லாமே எங்க அம்மா தான். இதனால் என் அம்மாவிடம் நான் சம்பாரிக்கும் பணத்தை கொடுத்துவிடுவேன். எனக்கு தேவைப்படும் போது பணத்தை அவரிடம் இருந்து கேட்டு வாங்கி கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.