இந்திய கால்பந்து அணி; கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

Sunil Chhetri Indian Football Team Social Media
By Swetha May 16, 2024 06:02 AM GMT
Report

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சுனில் சேத்ரி 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் பதவியில் சுனில் சேத்ரி இருந்து வருகிறார். கடந்த 1984ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த சுனில் சேத்ரி 2002ம் ஆண்டு முதல் தொழில்முறை ரீதியிலான கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்திய கால்பந்து அணி; கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - பெரும் சோகத்தில் ரசிகர்கள்! | Indian Football Team Captain Sunil Chetri

அதில் சுனில் சேத்ரி உலகளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதுவரையிலும் விளையாடி வரும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (128), லயோனல் மெஸ்ஸி (106) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 94 கோல்களுடன் அவர் 3வது இடத்தில் உள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட விருப்பம் - அமைச்சர் மகிழ்ச்சி தகவல்!

அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட விருப்பம் - அமைச்சர் மகிழ்ச்சி தகவல்!

ஓய்வு அறிவிப்பு

இந்திய கால்பந்து அணி மட்டுமல்லாமல் உலகின் மற்ற கிளப் அணிகளுக்கும் சுனில் சேத்ரி விளையாடி இருக்கிறார். இந்த விளையாட்டு துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.

இந்திய கால்பந்து அணி; கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - பெரும் சோகத்தில் ரசிகர்கள்! | Indian Football Team Captain Sunil Chetri

இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து போட்டிகளில் விளையாடி வரும் சுனில் சேத்ரி விரைவில் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அடுத்த மாதம் குவைத் கால்பந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியுடன், சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.