28 வயதான பிரபல கால்பந்து வீரர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா உயிரிழந்தார்.
தியாகோ ஜோட்டா மறைவு
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் பிரபல கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா(28). இவர் வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். இவரது மரணம் ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த விபத்து குறித்து வெளியான தகவலின் படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை முந்தி செல்லுகையில் டயர் வெடித்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து விலகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் காரணமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தியாகோ ஜோட்டாவுக்கு கடந்த மாதம்தான் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது.