ஷமியின் முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் - நீதிமன்றம் உத்தரவு!
ஷமியின் முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும், இவரது மனைவி ஹாசின் ஜஹானுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தொடர்ந்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டு அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார் ஹாசின்.
ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்
இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் மகள் தாயோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் விவாகரத்து சம்மந்தமான தனக்கு மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வேண்டுமென ஹாசின் கேட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஹாசினுக்கு மாதம் 1.4 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென மேற்கு வங்கத்தின் அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஹாசின் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷமி மாதம் நான்கு லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக அவருக்கு வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.